விமானப்படையின் புதிய தலைவராக ஏ.பி.சிங் நியமனம்.! - Seithipunal
Seithipunal


விமானப்படை தளபதியாக தற்போது இருக்கும் ஏர் மார்ஷல் விவேக் ராம் செளத்ரி செப்டம்பர் 30-ம் தேதி அதாவது இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். இதனால், காலியாக இருக்கும் அந்தப் பதவிக்கு ஏ.பி. சிங் என்றழைக்கப்படும் துணைத்தளபதி அமர் பிரீத் சிங் நியமிக்கப்படுவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன் படி அவர் இன்று விமானப் படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார். கடந்த 1984-ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்த ஏ.பி. சிங், தேசிய பாதுகாப்பு அகாதெமி, குன்னூரின் வெல்லிங்டன்னில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி, தேசிய பாதுகாப்புக் கல்லூரி ஆகியவற்றில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 

மேலும், மிக் – 27 போர் விமானங்களின் கமாண்டிங் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இப்படி பல்வேறு பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு அதி விஷிஷ்த் சேவை பதக்கம் மற்றும் 2023 ஆம் ஆண்டில் பரம் விஷிஷ்த் சேவை பதக்கத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ap singh appointed air force leader


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->