புகார் அளித்த பாஜக பிரமுகர் கொலை! திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது!
Vellore BJP Vittal Kumar murder case
வேலூரில் பாஜக பிரமுகர் விட்டல் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் மற்றும் அவரின் மகன், ஊராட்சி மன்ற செயலாளர் தரணி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட பாஜக ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலாளர் விட்டல் குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு, தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் மற்றும் அவரது மகன் தரணி குமார் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த கொலை வழக்கில் சந்தோஷ் குமார் மற்றும் கமல் தாசன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
விட்டல் குமார், ஊராட்சி மன்றம் குறித்து தொடர்ந்து புகார் அளித்து வந்ததாகவும், அதனாலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Vellore BJP Vittal Kumar murder case