எங்கு ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை முன்னேற்றுவதுதான் தனது ஒரே நோக்கம்! அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி.! - Seithipunal
Seithipunal


எங்கு ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை முன்னேற்றுவது தான் தனது வாழ்நாள் குறிக்கோள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், எங்கு ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை முன்னேற்றுவது மட்டுமே ஒரே நோக்கம் என்றும், பிரதமர் மோடியை தோற்கடிப்பது தனது வாழ்நாள் திட்டமில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் ஆம் ஆத்மி சொந்த எதிர்பார்ப்பையும் தாண்டி பஞ்சாபில் வெற்றி பெற்றதாகவும், காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் கட்சிகளால் மக்கள் சோர்ந்து போயிருந்ததாக தெரிவித்தார். டில்லியில் நடைபெற்ற நேர்மறையான மாற்றங்களை மக்கள் தெரிந்து கொண்டதாலேயே பஞ்சாபிலும் அதையே விரும்பி ஆம் ஆத்மி கட்சியை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை இருப்பதாகவும், பாரதிய ஜனதா கட்சியையும் பிரதமர் மோடியையும் தோற்கடிப்பதை எனது நோக்கமாக கொண்டிருந்ததில்லை என்று தெரிவித்த அவர், இந்த நாடு உலகின் முதல் நிலையில் இருப்பதையே தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் நேர்மறையான திட்டத்தை மக்கள் விரும்புவதாகவும், டில்லியை ஐந்து ஆண்டுகளில் சரிசெய்ய முடியும் போது அதைப் போலவே நாட்டையும் சரிசெய்ய முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் ஆம் ஆத்மி கட்சியின் மாற்றத்துக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்தால் அவர்கள் ஆட்சியை தருவார்கள் எனறும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aravind kejriwal speech about election


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->