புதுச்சேரியில் மீட்புப் பணி - ராணுவம் அழைப்பதாக ஆட்சியர் தகவல்.! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் உருவான 'பெஞ்சல்' புயல் நேற்று இரவு மாமல்லபுரம்-புதுச்சேரிக்கு இடைப்பட்ட பகுதியை மையமாகக் கொண்டு கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகவும், வட மாவட்டங்களில் சூறைக்காற்று வீசியது என்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து புதுச்சேரியில் அதிகாலை 3 மணி முதல் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் உள்ள அடைப்புகளால் மழை வெள்ளம் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூறாவளிக் காற்று வீசியதால் நகரில் நூற்றுக்கணக்கான மரங்கள் சாலையில் விழுந்துள்ளன.

இந்த நிலையில் புதுச்சேரியில் மீட்புப் பணிக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "புதுச்சேரியில் மீட்புப் பணிக்காக ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். தேவைக்கு உதவி எண்களை அழைக்கலாம். கனமழை பெய்து வரும் நிலையில் புதுச்சேரியில் இன்று திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

army force come to puthuchery for rescue work


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->