மணிப்பூரில் தொடரும் பதற்றம்.. துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் பலி..!!
Army soldier was killed in firing during the Manipur riots
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி வகுப்பை சேராத மேதி இன மக்கள் எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் அதற்கு பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மே தின மக்கள் நடத்திய பேரணையின் போது இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் மணிப்பூர் மாநில முதல்வர் பேசவிருந்த மேடைக்கு தீவைக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் வெடித்தது.
இதனால் அந்த பகுதிகளில் இணையத் தொடர்பு, செல்போன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, ராணுவப் படைகள், விரைவு அதிரடிப் படை, மத்திய காவல்துறை படைகள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு சுராசந்த்பூர் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற என்கவுன்ட்டர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். சுராசந்த்பூர் மாவட்டத்திலுள்ள சைட்டனில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மணிப்பூர் மாநில காவல் துறை என தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 16 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 15 பேரின் உடல்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். நேற்று இரவு முழுவதும் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்ட குழுவிற்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த அதே வேளையில், ஒரு எல்லை பாதுகாப்பு வீரர் படுகாயமடைந்தார். இதற்கு பாதுகாப்புப் படையினர் திறம்பட பதிலடி கொடுத்தனர். துப்பாக்கி சூடு நடைபெற்ற பகுதி முழுவதும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் இந்திய ராணுவ எல்லை பாதுகாப்பு வீரர் ரஞ்சித் யாதவ் துப்பாக்கி குண்டால் படுகாயம் அடைந்த நிலையில் ஜிவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் பதட்டமான சூழல் நீடித்து வருகிறது.
English Summary
Army soldier was killed in firing during the Manipur riots