சீன ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட அருணாச்சல பிரதேச சிறுவன்.. மீட்க கோரிக்கை..!
Arunachal Pradesh boy captured by Chinese army
சீன ராணுவத்தால் அருணாச்சல பிரதேச சிறுவன் கடத்தப்பட்டதாக அம்மாநில அமைச்சர் சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சீனாவை ஒட்டிய அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் அப்பர் சியாங் மாவட்டத்திலுள்ள சிடோ கிராமத்தை சேர்ந்த மிராம் தாரோன் (17) மற்றும் ஜாணி யாயிங் சிறுவர்கள் இந்திய சீன எல்லை அருகே வேட்டையாடுவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த சீன ராணுவத்தினர் இரு சிறுவர்களையும் சிறை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஜாணி யாயிங் தப்பிய நிலையில் மிரான் தாரோன் சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை கிழக்கு அருணாச்சல் பிரதேசம் தொகுதியின் எம்.பி தபிர் காவோ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் கடத்தப்பட்ட சிறுவனை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
மேலும், உள்துறை இணையமைச்சரிடம் இந்த பிரச்சனையை விளக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Arunachal Pradesh boy captured by Chinese army