டெல்லியின் முதலமைச்சராக பெறுப்பேற்க உள்ள ரேகா குப்தாவுக்கு, வாழ்த்து தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால்..!
Arvind Kejriwal congratulates Rekha Gupta on being elected as the Chief Minister of Delhi
டெல்லி முதலமைச்சராக பா.ஜ.க.வை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை பகல் 12 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ.க. அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது.
டெல்லி துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா, புதிய முதலமைச்சருக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தாவுக்கு, டெல்லி முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
டெல்லி முதலமைச்சகராக பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு வாழ்த்துகள். டெல்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். டெல்லி மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக அவர் எடுக்கும் ஒவ்வொரு பணியிலும் நாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம். என்று அதில் தெரிவித்துள்ளார்.
English Summary
Arvind Kejriwal congratulates Rekha Gupta on being elected as the Chief Minister of Delhi