சட்டசபைக்கு முன்பு பதாகையுடன் போராட்டம் - திமுக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி.!!
dmk mla protest front of assembly in chennai
வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை வளாகத்திற்கு முன்பு பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன் பின்னர் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர். மேலும், சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.
அத்துடன் சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், சட்டசபை வளாகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர்.
English Summary
dmk mla protest front of assembly in chennai