நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரை சந்திப்பார் - துணை முதல்வர் தகவல்.!!
deputy cm uthayanithi stalin say minister thangam thennarasu visit pm modi
வருகிற 6-ந்தேதி அன்று பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. ராமநவமி அன்று ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய ராமேசுவரத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார்.
இந்த திறப்பு விழாவை முன்னிட்டு தமிழகம் வரும் பிரதமர் மோடியை தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சந்திக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டு இருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது:-

"வரும் 6-ந்தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை நிதி அமைச்சர் நேரில் சந்திப்பார். தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியை சந்திப்பார். மத்திய அரசு விடுவிக்காத நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்துவார்.
முதலமைச்சருக்கு வேறு அலுவல் பணிகள் உள்ளதால் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியை சந்திப்பார்" என்று தெரிவித்தார்.
English Summary
deputy cm uthayanithi stalin say minister thangam thennarasu visit pm modi