பண்ருட்டி பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு..!!
geographical indigation to pandruti jack fruit
ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தன்மை கொண்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்படுகிறது. இதனால், அந்த பொருட்கள் சர்வதேச அளவில் பிரபலமாகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மரச்சிற்பம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, பத்தமடை பாய் உள்ளிட்ட பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
இந்த புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரை தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த நிலையில், பண்ருட்டி பலாப்பழம் உட்பட தமிழகத்தில் மேலும் ஆறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
English Summary
geographical indigation to pandruti jack fruit