நெருங்கும் ஜூன் 2... உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு.! எதற்காக தெரியுமா?
Arvind kejriwal petition supreme court extension Interimbail
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீடு மனு பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த 10 ஆம் தேதி உத்தரவிட்டது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம் எனவும் ஜூன் 2 ஆம் தேதி மீண்டும் சரணடைய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் பிஇடி, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதால் இடைக்கால ஜமீனை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Arvind kejriwal petition supreme court extension Interimbail