பெண் தேர்வரின் அந்தரங்க உறுப்பில் சோதனை - அதிரடி உத்தரவிட்ட முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


நேற்று அசாம் மாநிலம் முழுவதும் நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத வந்த பெண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளை பெண் காவலர் ஒருவர் சோதனை செய்ததாக கூறி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், வேறு சில பெண்களும் தாங்களும் இதேபோன்ற சங்கடத்தை அனுபவித்ததாக குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் அசாம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தேர்வு எழுத வந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை பெண் காவலர் சோதனை செய்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஷ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். அதன் படி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பேசிய முதல்வர், "என்னைப் பொறுத்தவரை, எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்ணியம் மற்றும் மரியாதை மிகவும் முக்கியமானது. 

வடக்கு லக்கிம்பூரில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் டிஜிபி என்னிடம் கூறினார். அதே நாளில் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையில் இருந்து மோசடி செய்வதற்கான பொருட்கள் கிடைத்தன" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assam cm order woman police test examine private part issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->