அட சோகமே .. அசாமில் வெள்ளத்தால் இவ்வளவு பாதிப்பா?!
Assam Flood Impact Details
அசாம் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு இருந்து பிரம்மபுத்திரா ஆறு மற்றும் அதன் 8 கிளை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று (ஜூலை 2) ஆறுகளில் நீரின் அளவு மேலும் மேலும் அதிகரித்ததையடுத்து அசாம் மாநிலத்தில் வெள்ளத்தின் அளவும் அதிகரித்தது.
அங்கு காம்ரூப், தமுல்பூர், சிராங், மோரிகான், லக்கிம்பூர், பிஸ்வநாத், திப்ருகார், கரீம்கஞ்ச், உடல்குரி, நாகோன், போங்கைகான், சோனித்பூர், கோலாகட், ஹோஜாய், தர்ராங் உள்ளிட்ட 28 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 11.34 லட்சம் மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
மேலும் இந்த மாநிலங்களில் உள்ள விலை நிலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கி விட்டன. இதையடுத்து இரண்டாவது முறையாக மீண்டும் ஏற்பட்ட வெள்ளத்தால் அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா ஆறு அபாய கட்டத்தைத் தாண்டி பாய்ந்து கொண்டுள்ளது.
இந்த வெள்ளத்தால் சுமார் 8 லட்சம் கால்நடைகள் பாதிக்கப் பட்டுள்ளன. மேலும் 74 சாலைகள் முற்றிலும் துண்டிக்கப் பட்டுள்ளன. மேலும் 6 பாலங்கள் மற்றும் 14 அணைகளின் கரைகள் சேதமடைந்துள்ளன.
இதையடுத்து வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்கள் மீட்கப் பட்டு முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
இதற்காக 489 இடங்களில் முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. அங்கு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களும், கால்நடைகளுக்கு தீவனமும் வழங்கப் பட்டுள்ளன. இந்நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
Assam Flood Impact Details