அசாம் போலீசில் பெண் சிங்கம் என்று அழைக்கப்பட்ட துணை காவல் ஆய்வாளர் கார் மோதி பலி.!
assam police lady lion died in car accident
அசாம் போலீசில் பெண் சிங்கம் என்று அழைக்கப்பட்ட துணை காவல் ஆய்வாளர் கார் மோதி பலி.!
அசாம் மாநிலத்தின் காவல்துறையில் பெண் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜூன்மோனி ரபா. இவர் பணியாற்றிய அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் புகார்களை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதிலும், குற்றவாளிகளை துணிச்சலாக பிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதிலும் திறமையாக இருந்து வந்தார்.
இதனால் அவர் அசாம் காவல்துறையில் "பெண் சிங்கம்" என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டார். இந்நிலையில் ஜூன்மோனி ரபா நேற்று அதிகாலை காரில் அப்பர் அசாம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி, ரபா சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜூன்மோனி ரபா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஜூன்மோனி ரபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விபத்தை ஏற்படுத்திய உத்தரபிரதேச மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே ஜூன்மோனி ரபாவின் உறவினர்கள், ஜூன்மோனி ரபாவின் சாவில் மர்மம் உள்ளது. அவர் கார் மீது கண்டெய்னரை ஏற்றி கொலை செய்துள்ளனர். அவர் மீது வேண்டுமென்றே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வீட்டில் இருந்த பணத்திற்கு உரிய கணக்கு உள்ளது. அதனை போலீசார் ஏற்காமல் அவர் மீது வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே இந்த வழக்கை நேர்மையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளனர்.
English Summary
assam police lady lion died in car accident