#BigBreaking || 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி - சற்றுமுன் தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்புகள்.!
assembly election date announce jan 2022
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் ஆய்வு நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், உத்திரப்பிரதேசத்திலும் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை, இன்று மாலை 3.30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக இன்று காலை அறிவிப்பு வெளியாகியது.
அதன்படி, சற்றுமுன் (மலை 3.30 மணி) செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"நோய் தொற்று பரவாத வகையில் இந்த தேர்தல் நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் முதல் நோக்கமாகும். கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தமாக 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 5 மாநில சட்டப்பேரவை களில் மொத்தம் 690 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன." என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார்.
English Summary
assembly election date announce jan 2022