கர்நாடகா|| பெண்களின் இலவச பேருந்து பயணத்தால் ஆட்டோ ஓட்டுனர்கள் கடும் பாதிப்பு.!!
auto drivers affected for woman free bus in karnatraga
கர்நாடகா|| பெண்களின் இலவச பேருந்து பயணத்தால் ஆட்டோ ஓட்டுனர்கள் கடும் பாதிப்பு.!!
கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பெருபாலனான எண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தனர்.
அதில், ஒன்றான அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் கடந்த 13-ம் தேதி முதல் மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக அரசு பேருந்துகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், இலவச பயண திட்டத்தால் ஆட்டோ, வாடகை டாக்சி, வேன் போன்றவற்றில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக சரிவடைந்துள்ளது. மேலும், பெங்களூருவுக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் செல்லும் தனியார் பேருந்துகளில் பெண்களின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. அதில் அவர், ‘‘காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை ஆட்டோ ஓட்டி இருக்கிறேன். வெறும் 40 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளது'' என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் அதனை பகிர்ந்து, இலவச பயண திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக அரசை விமர்சித்துள்ளனர்.மற்றொரு பக்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் இரு மடங்கு கட்டணம் கேட்பதாலேயே பயணிகள் அதனை புறக்கணிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
auto drivers affected for woman free bus in karnatraga