தமிழக அரசை பாராட்டிய திமுகவின் செயற்குழு! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!  - Seithipunal
Seithipunal


சென்னை திமுகவின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 1000 பேர் கலந்து கொண்ட இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசின் செயல்திறனைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி.

  1. பெஞ்சல் புயலின்போது, சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு தீர்மானம்,
  2. சாத்தனூர் அணையை படிப்படியாக திறக்க உத்தரவிட்டு, உயிர்ச்சேதத்தை தவிர்த்த முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு பாராட்டு தீர்மானம், 
  3. திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு தீர்மானம், 
  4. அமித் ஷாவை கண்டித்து போராட்டம் நடத்திய திமுக எம்.பி.க்கள், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாராட்டு தீர்மானம், 
  5. பெஞ்சல் புயல் பாதிப்பு நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வலியுறுத்தி தீர்மானம், 
  6. அம்பேத்கரை தரம்தாழ்த்தி, அவதூறாகப் பேசி, அவரின் தியாகத்தை இழிவுபடுத்தியதாக அமித் ஷாவை கண்டித்து தீர்மானம், 
  7. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக தீர்மானம்,
  8. மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலச் சட்டத்தை ஆதரித்ததாக அதிமுக, பாஜகவை கண்டித்து தீர்மானம்,
  9. தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு போதுமான நிதி வழங்காமல், மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சிப்பதாகக் கண்டன தீர்மானம், 
  10. குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு எதிர்ப்பு; கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க தமிழக அரசு செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கு பாராட்டு தீர்மானம், 
  11. தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
     

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin wish to DMK Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->