சென்னை கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடார் கருவி பொருத்தம்..!
new radar instrument fitting in merina light house
சென்னை மெரினா கடற்கரையில் 45 அடி உயரத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கலங்கரை விளக்கத்தின் 11வது மாடியில் சக்திவாய்ந்த ரேடார் கருவி மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரேடார் கருவி மூலம் 150 கிலோ மீட்டர் தொலைவில் வரும் கப்பல்கள் மற்றும் படகுகளை கூட துல்லியமாக கண்காணிக்க முடியும்.
இது கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரேடாரின் ஸ்கேன் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை, கலங்கரை விளக்க அதிகாரிகள் உடனுக்குடன் கடலோர காவல்படைக்கு அனுப்பி வருகின்றனர்.
இதில் வரும் கதிர்வீச்சு தாக்கம் காரணமாக 10வது மாடி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து புதிய ரேடார் கருவி கொண்டுவரப்பட்டு, கலங்கரை விளக்கத்தில் 60 அடி உயரம் கொண்ட கிரேன் இந்திரம் மூலம் புதிய ரேடார் கருவி பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
new radar instrument fitting in merina light house