இந்திய | தபாலில் வந்த விருது! திருப்பி அனுப்பிய வீர மரணம் அடைந்த இராணு வீரர் குடும்பம்! - Seithipunal
Seithipunal


கடந்த 2017-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரரின் வீரமரணத்தை போற்றும் வகையில் ராணுவம் வழங்கிய ‘சவுர்யா சக்ரா’ விருதை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கோபால் சிங். இவர் இந்திய ராணுவத்தில் லான்ஸ் நாயக் பொறுப்பில் பணியாற்றியவர். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு பணியில் இருந்தபோது உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது வீரமரணத்தை போற்றும் வகையில் விருது கொடுக்கப்பட்டது. இதனை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர்.

இது குறித்து அவரது குடும்பத்தினர், "விருதை தபாலில் அனுப்பி இருக்கக் கூடாது. இது ராணுவ வழக்கத்தை மீறிய செயலாகும். மேலும், ராணுவ வீரரின் வீரமரணத்தையும், அவரது குடும்பத்தையும் அவமதிக்கும் செயலாகும். இதனால் தான் இந்த விருதை ராணுவத்திடம் திரும்ப தருகிறோம்". என்று தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து ராணுவ வீரரின் தந்தை முனிம் சிங், குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய தினங்களில் நாட்டின் குடியரசுத் தலைவர் கொடுக்க வேண்டிய விருது இது. இல்லையெனில், மூத்த ராணுவ அதிகாரி ராணுவ வீரரின் குடும்பத்திடம் விருதை கொடுத்திருக்க வேண்டும்". என்று தெரிவித்துள்ளார்.

கோபால் சிங், மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் என்.எஸ்.ஜி படையில்  பணியாற்றியுள்ளார். இதற்காக அவருக்கு விஷிஸ்ட் சேவா விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சவுர்யா சக்ரா, அசோக சக்ரா மற்றும் கீர்த்தி சக்ரா விருதுகள் வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

award retun to govt army man family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->