அயோத்தி கோயிலில் மக்கள் சுவாமி தரிசனம்: நாளை முதல்... தரிசன நேரம்? - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் பிரதிஷ்டை விழா இன்று நண்பகல் நடைபெற்றது. 

இந்த விழாவையொட்டி நாடு முழுவதும் விழா கோலமாக காட்சியளித்தது. சிலை பிரதிஷ்டை பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அமர்ந்திருந்தனர். 

இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என 7000 பேர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் பிற்பகல் 2 மணிக்கு மேல் பால ராமரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாளை முதல் அயோத்தி கோவிலில் உள்ள ராமரை பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் வரை தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பக்தர்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரையும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

மேலும் காலை 6:30 மணிக்கு இரவு 7:30மணிக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் மக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த பூஜையில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்ய வேண்டும். 

தற்போதுதான் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் தரிசன நேரத்தை அதிகரிக்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayodhya Temple People Swami Darshan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->