கை கூப்பி மீண்டும் மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்.!! - Seithipunal
Seithipunal


தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக பதஞ்சலி நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பாபா ராம்தேவ் நீதிமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். ஆனால் அதனை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. 

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் ஆஜரான பாபா ராம்தேவ் மற்றும் பால கிருஷ்ணா ஆகியோர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய குற்றத்திற்காக கைகூப்பி மன்னிப்பு கேட்டனர்.

மேலும் ஊடகங்களில் தங்கள் நடத்தைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baba Ramdev folded his hands and apologized again in SC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->