#BREAKING:: பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி தகுதி நீக்கம்..!! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணகாந்த் ராய் என்பவரை கடந்த 2005 ஆம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடியும் அரசியல்வாதியமான முக்தர் அன்சாரி மற்றும் அவருடைய சகோதரர் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி அப்சல் அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முக்தர் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதித்தது. அதேபோன்று அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெரும் நபர் மக்கள் பிரதிநிதித்துவம் சட்டத்தின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். சமீபத்தில் மோடி சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரைத் தொடர்ந்து தற்பொழுது உத்தப்பிரதேச மாநிலம் காசிபூர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி எம்பி அப்சல் அன்சாரி தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். பகுஜன் சமாஜ்வாடி கட்சி எம்பி அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தகுதி நீக்கம் செய்து நாடாளுமன்ற செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bahujan Samaj Party MP Afzal Ansari disqualified


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->