பெங்களூரு மக்களுக்கு விரைவில் நல்ல செய்தி! மீண்டும் தொடங்கும் பணிகள்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஏராளமான உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று எஜிபுரா மேம்பாலத் திட்டம். ஆனால் இந்த திட்டம் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு சித்தராமையா அவர்களால் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

அப்போதே நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதையடுத்து நடந்த தேர்தலில் 4 முதலமைச்சர்கள் மாறியதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அச்சமயத்தில் 50 சதவீதப் பணிகள் நிறைவடைந்து இருந்தன.

தொடர்ந்து ஒப்பந்ததாரரின் நிதிப் பற்றாக்குறை பிரச்சனை காரணமாக இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் சித்தராமையா முதலமைச்சராக இருப்பதால் இத்திட்டம் மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பை வெளியிட்டார் சித்தராமையா.

இந்நிலையில் தற்போது நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யச் சென்ற சித்தராமையா எஜிபுரா மேம்பாலப் பணிக்கான ஒப்பந்ததாரரை அழைத்து "உரிய நேரத்தில் மேம்பாலப் பணிகள் முடிக்கப்படவில்லையென்றால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக டெண்டர் விடப்படும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore Ejipura over bridge


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->