மனைவி, மாமியார் இரவில் பாலியல் தொல்லை, அடி உதையால் போலீசாரிடம் கண்ணீர் மல்கிய கணவர்..!
Husband breaks down in tears at police after wife and mother in law sexually harass and kick him at night
மத்திய பிரதேச மாநிலம் பன்னாவை சேர்ந்தவர் 30 வயதுடைய லோகேஷ். இவருடைய மனைவி ஹர்ஷிதா 27 வயது. கடந்த 2023-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. லோகேஷ் ரெயில் ஓட்டுநராக இருந்தாலும், வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக சென்றது.
இந்நிலையில், ஹர்ஷிதா தனது கணவரை துன்புறுத்த தொடங்கியுள்ளார். அத்துடன், மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோர் நகை மற்றும் பணத்தை கேட்டு அவரை சித்தரவதை செய்யத்தொடங்கியுள்ளனர்.
-xkhq3.png)
அத்துடன் இரவில் அவரை உடல் ரீதியாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததும் கொடுமை படுத்தியுள்ளனர். மேலும், அவர்களின் சித்தரவதை நாளுக்குநாள் அதிகரித்தன. இதனால் லோகேஷ் அவர்களுக்கு தெரியாமல் ஒரு திட்டத்தை வகுத்தார்.
அதன்படி, அவர் அவர்களது அறையில் ஒரு ரகசிய கேமராவை பொருத்தியுள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் லோகேஷை உட்கார வைத்து 02 கன்னங்களிலும் பளார்...பளார் என்று ஆராய்ந்துள்ளார்.
அப்போது, அடிகளை தாங்க முடியாமல் கணவன் லோகேஷ் கைகளை உயர்த்தி கும்பிட்டு தன்னை விட்டு விடும்படி கெஞ்சியம், மனைவி ஹர்ஷிதா கணவர் என்று கூட பார்க்காமல் கருணை காட்டவில்லை. அத்தோடு, லோகேஷ் மீது அமர்ந்து முகத்தில் பலமாக உதைத்துள்ளார். இந்தகாட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளன.
-2rnms.png)
அத்துடன், தனக்கு தினந்தோறும் மனைவி, மாமியார் கொடுமை செய்வதாக லோகேஷ் தான் அடிவாங்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட்டுள்ளதோடு, இது குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார்.
மேலும், தனது மனைவி மற்றும் மாமியார் தினமும் இரவில் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து தன்னை பாதுகாக்குமாறு போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Husband breaks down in tears at police after wife and mother in law sexually harass and kick him at night