தமிழகத்தில் நடந்தது போலவே, பெங்களூரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


அண்மையில் தமிழகத்தில் நடந்தது போலவே, கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாலையில் நடந்த சென்ற பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டாம் தேதி அதிகாலை பெங்களூர் மாநகரின் கோணங்குண்டே பகுதியில் தனியாக நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை, பின் பக்கத்திலிருந்து வந்த மர்ம நபர் கட்டிப்பிடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் பெங்களூரில் வசித்து வருவதாகவும் முதல் பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சம்பவம் நடந்த அன்று அதிகாலை தனது தோழிக்காக காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தப்பி ஓடிய மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் தெருவிக்கையில், அந்த மர்ம நபர் வேகமாக ஓடிவந்து தன்னை கட்டி பிடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே போலீசார் கைப்பற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சியில், அந்த பெண் கூறியது போல சம்பவம் நடந்திருப்பது உறுதி ஆகி உள்ளது.

இதனை அடுத்து விரைவில் அந்த மர்ம நபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore Lady Abused in Morning walking


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->