திருப்பதியில் கோவில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற வங்கி ஊழியர் கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் கோவில் உண்டியல் பணத்தை முக கவசத்தில் மறைத்து திருடிச் சென்ற வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி அடுத்த சந்திரகிரி பகுதியை சேர்ந்தவர் திலீப். இவர் வங்கி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வங்கியில் பணி புரியும் 50 ஊழியர்கள் ஷிப்ட் ஒன்றுக்கு 25 பேர் என 2 ஷிப்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தை என்னும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நேற்று திலீப் உண்டியல் பணம் என்னும் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்பு பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது திலீப் தனது முக கவசத்தில் ரூபாய் 94 ஆயிரத்தை மறைத்து வைத்து எடுத்து சென்றுள்ளார்.

இவர் மீது சந்தேகம் அடைந்த தேவஸ்தான அதிகாரிகள் அவரை சோதனை செய்ததில் திலீப் முக கவசத்தில் 47, 2000 ரூபாய் நோட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரிடம் இருந்த 94 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள், திலீப்பை போலீஸிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் திலீப் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் திலீப் ஏற்கனவே லட்டு கவுண்டரில் பணிபுரிந்த போது டோக்கன்களை திருடி பக்தர்களுக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bank employee arrested for stealing money from temple bills in Tirupati


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->