காந்தி நினைவிடத்தில் காலனி அணியாமல் வெறும் கால்களுடன் நடந்து சென்ற உலக தலைவர்கள்! - Seithipunal
Seithipunal


இந்தியர்களை வெள்ளையர்களுக்கு எதிராக ஒன்று திரட்டி அகிம்சை வழியில் பல வருடங்களாக போராட்டம் நடத்தி 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற காரணமாக இருந்த சுதந்திரப் போராட்ட தலைவர் மகாத்மா காந்தி. 

மகாத்மா காந்தி போர், இரத்தம் சிந்துதல், வன்முறை போன்றவற்றையெல்லாம் வெறுத்து அகிம்சை வழியிலேயே போராடி சுதந்திரம் பெற்றவர். 

இவரது நினைவிடம் மத்திய புது டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ளது. ஜி 20 உச்சி மாநாட்டின் இறுதி நாளான என்று காந்தி நினைவிடத்திற்கு வருமாறு பிரதமர் உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டு தலைவர்கள் வருகை புரிந்திருந்தனர். அவர்களை பிரதமர் வரவேற்றார். உலக தலைவர்கள் காந்தி நினைவிடத்திற்கு வந்து மலர் வளையம் வைத்து சில நொடிகள் மௌன அஞ்சலி செலுத்தி பின்னர் பாரம்பரிய இந்திய இசை முழங்கியது. 

இந்த நிகழ்வின் போது ஜெர்மனி, அதிபர் பிரான்ஸ், கனடா அதிபர் ஆகியோர் காலனி அணியாமல் வெறும் காலுடன் ஈரத்தரையில் நடந்து சென்றனர். 

அனைத்து உலக தலைவர்களும் ரஷ்யா உக்ரைன் போர் குறித்த வார்த்தைகளை தவிர்த்து ஒப்புதல் வழங்க ஒரு கூட்டரிக்கை வெளியிடப்பட்டது. 

இந்திய ஜி 20 தலைமையின் முக்கிய வெற்றியாக பருவ கால மாற்றங்களின் விளைவுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக்க நடவடிக்கை எடுத்ததும் உலக தலைவர்கள் ஒன்றிணைந்து சிக்கல்ன்களுக்கு அமைதி வழியில் தீர்வு காண காந்தி நினைவிடத்திற்கு அவர்களை அழைத்த மோடியின் ராஜதந்திரம் அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

barefoot walk world leaders raj hat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->