அசாமில் மாட்டிறைச்சி தடை: கொந்தளித்த எதிர்க்கட்சிகள்!
Beef ban in Assam Opposition parties in turmoil
அசாமில் மாட்டிறைச்சி விற்பனையையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்த புதிய உத்தரவுகளை மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். திருத்தப்பட்ட கால்நடை பாதுகாப்புச் சட்டம், 2021 கீழ், கோயில்கள் மற்றும் இந்து, ஜைன், சீக்கிய மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் மாட்டிறைச்சி விற்பனை மற்றும் சமைப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கோயில்களைச் சுற்றி 5 கி.மீ. தூரத்திற்குள் மாட்டிறைச்சி விற்பனை, அறுத்தல் மற்றும் சமைத்தல் குற்றமாகும். மேலும், பொது இடங்களில், உணவகங்களில் மற்றும் விடுதிகளில் மாட்டிறைச்சியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை விதிப்பை மீறுபவர்களுக்கு 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, மேலும் ₹3 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அசாமின் எதிர்க்கட்சிகள் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளன. மதம் சார்ந்த அரசியல் செய்யப்படுவதாகவும், சிறுபான்மையினரின் உணவுப் பழக்க வழக்கங்களில் தலையீடு செய்யப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதேவேளையில், இந்த சட்டம் மூலம் மத இடங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் அமைதி காக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த புதிய முடிவு சமூக அமைப்பிலும், சமூகப் பண்பாட்டிலும் புதிய பரபரப்பை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Beef ban in Assam Opposition parties in turmoil