பீகார் முதலமைச்சரை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு.! உச்சநீதிமன்றம் தள்ளுபடி.!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ்குமாரை நீக்கக் கோரி சந்தன் குமார் என்பவர், உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் எம்.எம்.சுந்திரேஷ் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

இந்த மனு குறித்து மனுதாரர் தரப்பில் தெரிவித்ததாவது, "பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் இருக்கும் நிதிஷ்குமாருடைய நியமனம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு விதிகளை மீறுவதாகும். 

இவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் தேர்தலுக்கு பின்பு கூட்டணியை உருவாக்கினார். இதன்மூலம், தேர்தலுக்கு முன்பு உள்ள  கூட்டணியை உடைத்துவிட்டு அவர் வாக்காளர்களை ஏமாற்றியுள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பு கூட்டணியை அமைத்துவிட்டு, தேர்தலுக்கு பின்னர் கட்சியின் திட்டங்களை மீறி பதவிக்கு வர ஆசைப்பட்டு தேர்தலுக்கு பின்பு கூட்டணி அமைத்து, இதுபோன்ற சுயநலமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆகவே தேர்தலுக்கு முன்புள்ள கூட்டணிகள் சிதறாமல் இருப்பதற்கு நாடாளுமன்றம் முறையான சட்டத்தை உருவாக்க வேண்டும்.

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 10வது அட்டவணையில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாவது:- "தேர்தலுக்கு பின்பு அமைக்கும் கூட்டணியை அரசியலமைப்புச் சட்டம் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கிறது. ஆகவே இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது" என்று உத்தரவிட்டு, பீகார் மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ்குமாரை நீக்கக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beehar chief minister nithiskumar posting dismiss case supreme court rejected


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->