பீகார் மாநிலம் இரண்டாம் இடம் - இரண்டரை மணி நேரத்திற்கு ஒரு காதல் ஜோடி ஓட்டம்..! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பெண் குழந்தை காணாமல் போனதாகவும், கடத்தப்பட்டதாகவும் போலீசில் புகார் அளிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் சிறுமிகள் கடத்தப்படவில்லை, அவர்களாகவே விருப்ப பட்டு தங்களது காதலனுடன் ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

போலீசாரின் அறிக்கையை பார்த்தால், கடந்த 6 மாதங்களில், பீகார் மாநிலத்தில், இதுபோன்ற 1870 சிறுமிகள் திருமணத்திற்காக ஓடிப்போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்த எண்ணிக்கையை தினசரி அடிப்படையில் பார்த்தால், பீகாரில் ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கும் ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு ஓட்டம் பிடிக்கிறது. அதே நேரத்தில், இந்த ஆண்டு, இதுவரை 2778 இளம்பெண் கடத்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் படி பார்த்தால், இந்த வழக்கில் பீகார் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

2020ல் மட்டும் 5308 சம்பவங்கள் நடந்த நிலையில், 2021ல் 6589 வழக்குகள் பதிவாகியுள்ளன. முன்பு ஆண்கள் பெண்ணுடன் ஓடிவந்த நிலை மாறி, தற்போது, பெண்கள் தன் காதலனுடன் ஓடுகிறார்கள். காதலனுடன் ஓடிப்போய்விட்டதாக காதலி தாமாக முன் வந்து வெளிப்படையாக தெரிவிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பீகாரில் கடந்த 2017 ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டில் 2000 வழக்குகள் அதிகரித்து சுமார் 8 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

behar state 2 place in National Crime Archives


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->