லெஸ்பியன் இணையர் வேண்டும்.. போலி ஐடியில் பெண்களை சீரழித்த இளைஞர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் 21 வயதான பிரபஞ்ச் நாச்சப்பா என்பவர் தனியார் கல்லூரி ஒன்றில் கடைசி வருடம் படித்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் பெண் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்தி 30-40 இளம்பெண்களை அவர் ஏமாற்றி வலையில் சிக்க வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

தன்னை லெஸ்பியன் என்று கூறிக்கொண்டு தனது பெயர் பிரதிக்ஷா என்று பெண்களிடம் கூறி தனக்கு ஒரு லெஸ்பியன் பார்ட்னர் வேண்டும் என்று பல்வேறு பெண்களுக்கு கோரிக்கை அனுப்பி இருக்கிறார். 

அத்துடன் இந்த சமுதாயம் என்னை அவமானப்படுத்துகிறது என்று பரிதாபத்தை ஏற்படுத்தி பெண்களிடம் காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண படங்கள் ஆகியவற்றை பெற்றுள்ளார். பல பெண்களிடம் மாடலிங் துறையில் பணி புரிவதாகவும் உங்களையும் அதில் ஈடுபடுத்துகிறேன் என்று உதவுவதைப் போல நடித்து அவர்களிடம் அரை நிர்வாண புகைப்படங்களை பெற்று பின்னர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengaluru Men cheat Lesbian women


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->