3 ஆண்டுகளாக போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த பெங்களூரூ வாலிபர் கேரளாவில் கைது!
Bengaluru youth arrested Kerala police after 3 years
கேரள தென் மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் விநியோகம் செய்த பெங்களூரூவை சேர்ந்த அனகேஷ் (வயது 24) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக போலீசார் தேடப்பட்டு வந்தனர்.
இவரை பிடிப்பதற்காக கோழிக்கோடு போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர கண்காணிப்பில் தனி படையினர் ஈடுபட்டு வந்த நிலையில் அனகேஷ் கேரளவைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து அறிந்த போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர். தொடர்ந்து கண்காணிப்பில் இருந்த போலீசார் அனகேஷ் வீட்டிற்கு வந்ததும் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, பல்வேறு போதை பொருள் வழக்குகள் அனகேஷ் மீது உள்ளன. வழக்குகளின் அடிப்படையில் போலீசார் அவரை தேடுவது அறிந்ததும் அவர் தலைமறைவாகிவிட்டார்.
பெங்களூருவில் அவர் சில மாதங்களுக்கு முன்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்றபோது அவரது காரை விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டார்.
அதன் பிறகு திருப்பதி, மும்பை, இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் தலைமறைவாக இருந்து வந்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரது நடமாட்டத்தை கவனித்து வந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒருவருடன் அனகேஷ் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் பதுங்கி இருந்து கைது செய்யப்பட்டது என்றனர்.
English Summary
Bengaluru youth arrested Kerala police after 3 years