மத்தியபிரதேசம் : பள்ளியில் திருடியதாக கூறி மாணவிக்கு செருப்பு மாலை அணிவித்து கொடுமை.!  - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பெட்டூல் மாவட்டம் டம்ஜிபுரா கிராமத்தில் அரசுப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கி பயின்று வருகிறார். 

இந்நிலையில், இவர் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரின் பணத்தை திருடியதாக கூறி செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றிவர வைத்துள்ளனர். 
இதனை அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மாணவியின் தந்தை விடுதி காப்பாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை தெரிவித்ததாவது, "விடுதியில் மற்றொரு மாணவி வைத்திருந்த நானூறு ரூபாய் பணத்தை 5-ம் வகுப்பு படிக்கும் தனது மகள் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து, விடுதியின் பெண் காப்பாளர், தனது மகளின் முகத்தில் கருப்பு நிற வண்ணம் பூசி பேய் போல் வேடமிட்டு, செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்துள்ளனர் என்று அந்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பெண் விடுதி காப்பாளரை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhopal school girl paraded with garland of shoes for theft


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->