மக்கள் அதிர்ச்சி! தொடர்ந்து விழும் பாலங்கள்! ஒரே மாதத்தில் 15வது பாலம்! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுவது பெரும் அதிர்ச்சி அளிக்கும் நிலையில், நேற்று மாலை மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பீகார் மாநிலங்களில் பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதை ஆகியுள்ளது. பீகாரின் பல்வேறு பகுதிகளில் பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவதும் விரிசல் விடுவதும் போன்ற சம்பவங்கள் நடைபெற்று மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 18 ஆம் தேதி அன்று, அராரியா மாவட்டத்தில் புதிதாக 12 கோடி செலவில் கட்டப்பட்ட சுமார் 180 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது. பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் நேற்று பாலத்தின் ஒரு பகுதி விடிந்து விழுந்தது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில், நேற்று மாலை அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பர்மா ஆற்று பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த பாலம் 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 2017 ஏற்பட்ட வெள்ளத்தின் முதல் சேதம் சேதம் அடைந்ததை அடுத்து , 2021 ஆம் ஆண்டு பூனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பாலம் திடீரென விழுந்து உள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் சாலையை கடக்கமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பீகாரில் உதயம் மாதத்தில் இதுவரை 15 பாலங்கள் இடிந்து விழுந்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மாநிலத்தில் அடிக்கடி நடக்கும் பாலம் இடிந்து விழும் சம்பவங்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சித்தனர். மேலும் பாலங்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar 15th bridge collapse in one month


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->