பீகார் : முதல்வர் சென்ற படகில் ஏற்பட்ட விபத்து.! உண்டான பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தின் பாட்னா பகுதிக்கு அருகில் கங்கை நதியில் சாத் பூஜை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நேரில் சென்றார். 

அப்போது முதல்வருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அரசு அதிகாரிகள் ஆகியோர் படகில் சென்றனர்.சாத்காட் பகுதியில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக, படகு திடீரென  அங்கிருந்த ஜேபி சேது பாலத்துடைய தூணில் மோதியுள்ளது. இதனால், அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில்  படகு தள்ளாடியது. ஆட்டம் கண்ட படகு சிறிது நேரத்தில் நின்றது. 

விபத்தில் பெரிய அளவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும், படகில் பயணம் செய்த முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் காயம் ஏதுமில்லாமல் உயிர் தப்பினர். இதன் காரணமாக அந்த பகுதியில்சற்று நேரம் பதற்றம் ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BIHAR CHEIF MINISTER BOAT ACCIDENT


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->