பீகார் | மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்! பின்னணியில் அதிர்ச்சி!
Bihar Journalist dead
பீகார் அராரியாவில் பத்திரிக்கையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பீகாரைச் சேர்ந்த பத்திரிகையாளர் விமல் குமார் (வயது 41) இவர் டைனிக் ஜாக்ரன் என்ற பத்திரிகையில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பிரேம் நகரில் வசித்து வரும் இவருக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் வீட்டிற்கு வெளியே வரும்படி தகவல் வந்துள்ளது.
இதனை அடுத்து விமல் குமார் வீட்டை விட்டு வெளியே வந்ததும் மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் விமல் குமார் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விமல் குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் விமல் குமாரை பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விமல் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமல் குமாரின் சகோதரர் கடந்த 2019 கொலை செய்யப்பட்டார். இதனை நேரில் பார்த்த சாட்சி விமல் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.