கணவனின் கிட்னியை ரூ.10 லட்சத்துக்கு விற்ற மனைவி; பணத்துடன் பேஸ்புக் காதலனோடு ஓட்டம்..!
Wife sells husband kidney for Rs10 lakh
மேற்கு வங்கத்தில் பெண் ஒருவர் தனது கணவனின் சிறுநீரகத்தை விற்று பணத்துடன் காதலுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரெய்ல் பகுதியில் வசித்துவரும் பெண், வீட்டின் நிதி சூழலை காரணம் காட்டி தந்து கணவனை சிறுநீரகத்தை விற்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.
தங்களது 10 வயது மகளின் வருங்கால திருமணம், குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை உறுதிசெய்வது என பல்வேறு விஷயங்களை கூறி கணவனுக்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சுமார் ஒரு வருடமாக சிறுநீரகத்தை வாங்குபவரை தேடி கணவன் அலைந்துள்ளார். பின்னர் மூன்று மாதங்களுக்கு முன்பு தனது சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு அவர் விட்டுள்ளார்.
அதன்பின் அந்த பெண் தனது கணவரின் சிறுநீரகத்தை விற்று வந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலனுடன் ஓட்டமெடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து குறித்த கணவன், தனது மனைவி பராக்பூரில் புதிய காதலுடன் வசித்து வருவதை அறிந்து அங்கு சென்றுள்ளார்.
அவர் பலமுறை முயற்சித்த பின் கடைசியாக மனைவி கதவை திறந்து அங்கிருந்து போகுமாறும் விரைவில் விவாகரத்து நோட்டிஸ் வழங்குகிறேன் எனவும் கூறி கணவனை துரத்தியுள்ளார்.
இதனால், மனமுடைந்த கணவன் தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Wife sells husband kidney for Rs10 lakh