"பாடமே எடுக்கல பணம் மட்டும் எதுக்கு.?" சம்பள பணத்தை திருப்பிக் கொடுத்த பேராசிரியர்.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் பகுதியில் நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இதில், உதவி பேராசிரியராக லாரன்குமார் என்ற 33 வயது நபர் பணியாற்றி வருகிறார். 

கடந்த செப்டம்பர் 2019 பணியில் சேர்ந்த லாரன்ஸ் குமார் சேர்ந்ததிலிருந்து அவரது சம்பள பணமான 24 லட்சத்தை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கே திருப்பி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து லாரன்குமார், "பாடம் எதுவுமே எடுக்காமல் சம்பளம் வாங்க எனக்கு மனசாட்சி அனுமதிக்கவில்லை. கொரோனா ஆன்லைன் வகுப்பின் போது, இந்தி வகுப்புகளுக்கு சில மாணவர்கள் மட்டுமே இருந்தனர். கற்பிக்காமல் பணம் வாங்குவது கல்வி மரணம் அடைந்ததற்கு சமம்." என்று தெரிவித்துள்ளார். 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் லாரன் குமார் இந்தியில் முதுகலை மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி மற்றும் எம்பி முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bihar lecturer returned his salary amount to nithiseshwar university


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->