கர்நாடகாவில் ராபிடோ,ஓலா போன்ற பைக் டாக்சி சேவைகளுக்கு தடை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
Bike taxi services like Rapido and Ola banned in Karnataka Court orders action
கர்நாடகாவில் ரேபிடோ, உபேர் உள்ளிட்ட பைக் டாக்சிகளை 06 வாரங்களுக்குள் தடை செய்ய வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், மாநிலத்தில் பைக் டாக்சிக்கான உரிய சட்டங்கள் வரும் வரை, பைக்குகளை வணிகப் போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன்படி அம்மாநிலத்தில், அடுத்த 06 வாரத்துக்குள் ரேபிடோ, ஓலா, உபர் போன்ற பைக் டாக்சி சேவைகளை நிறுத்த வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஷ்யாம் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அந்த மாநில அரசை 03 மாத காலத்திற்குள் பைக் டாக்சி இயக்குதலுக்கான தனி விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்கவும் நீதிமன்றம் அவகாசம் கொடுத்துள்ளது.
குறித்த தீர்ப்பு, பல மாதங்களாக சட்டப்பூர்வ ஆய்வுகளை எதிர்கொண்டுள்ள பைக் டாக்சி சேவைகளுக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. அத்துடன், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களுக்கு இணங்க இந்தத் தடை தேவை என்று அம்மாநில அரசு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Bike taxi services like Rapido and Ola banned in Karnataka Court orders action