கர்நாடகா சட்டசபைத் தேர்தல் : இன்று வேட்பாளர் பட்டியலை அறிவிக்குமா பாஜக?  - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டசபைத் தேர்தல் : இன்று வேட்பாளர் பட்டியலை அறிவிக்குமா பாஜக? 

224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே வெற்றி பெற்றவர்களில் பட்டியல் வெளியிடப்படும். இதற்கிடையே மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் பா.ஜ.க.வும், ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் காங்கிரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு  வருகின்றன. 

இந்தத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தனது முதல் மற்றும் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று தேசிய தலைநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது, "கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாளில் கட்சி அறிவிக்கும். கர்நாடக தேர்தலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்தோம்.

ஒருவேளை நாளை மீண்டும் கூட்டம் நடத்தலாம். பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் (அதாவது இன்று அல்லது நாளை) அறிவிக்கப்படும்" என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மைத் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp candidates announce today for karnataga assembly election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->