அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள அனைத்துக் கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டை முடித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்து பிறகு வாபஸ் பெற்றவர்களும் உள்ளனர்.

அந்த வகையில், பாஜக சார்பில் குஜராத்தில் வதோதரா தொகுதியில் சிட்டிங் எம்பியான ரஞ்சன் பட்-டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அங்கு அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால், தாம் போட்டியிடவில்லை எனத் தெரிவித்தார். இதேபோல், சர்பகந்தா மக்களவைத் தொகுதிக்கான பாஜக வேட்பாளராக பிகாஜி தாக்கூர் அறிவிக்கப்பட்டிருந்தார். அவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் அதே கதை தொடர்ந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மக்களவைத் தொகுதிக்கு மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் சிட்டிங் எம்பியான உபேந்திர சிங் ராவத். ஆபாச வீடியோ தொடர்பாக தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

இதேபோல், கான்பூர் மக்களவைத் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிட்டிங் எம்பியான சத்யதேவ் பச்சௌரி, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றுத் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத் தொகுதியில் போட்டியிட்டு இணையமைச்சரான வி.கே.சிங், வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp candidates withdraw from election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->