பாஜக நிர்வாகி "பிரசாந்த் உம்ராவ்" முன்ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்குபடுவது போன்று போலியான வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனால் அச்சமடைந்த வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்றனர்.

குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவின. இதனைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை என பீகார் மாநில அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தனர். 

இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட தமிழக போலீசார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் இந்த சர்ச்சைக்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது தெரியவந்தது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதால் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் பழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளனர்" என்ற உண்மைக்கு புறம்பான செய்தியை பதிவிட்டு இருந்தார்.

அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அவர் மீது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பாஜக நிர்வாகியை கைது செய்ய தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் வதந்தி பரப்பியதாக தமிழக காவல்துறையால் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால முன்ஜாமின் வேண்டும் எனவும் தன்னை கைது செய்ய தமிழக போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரசாந்த் உம்ராவ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executive Prashant Umrao petitions DelhiHC seeking anticipatory bail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->