அதிர்ச்சி... பாஜக நிர்வாகி, மனைவி கொடூர கொலை: தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், பிப்லோடா கிராமத்தைச் சேர்ந்தவர் பா.ஜ.க நிர்வாகி ராம்நிவாஸ் குமவாத். இவரது மனைவி முனிபாய். ராமநிவாஸ் பஞ்சாயத்து முன்னாள் தலைவராக இருந்தார். 

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வசித்து வரும் நிலையில் ராம்நிவாஸ்  மனைவியுடன் பிப்லோடா கிராமத்தில் வாழ்ந்து வந்தார். 

இந்நிலையில் நேற்று இரவு ராமநிவாஸ் மற்றும் அவரது மனைவி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் கூர்மையான ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. 

இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் முதற்கட்ட விசாரணையில், கொள்ளையடிக்க முயற்சி செய்து பின்னர் கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் இரட்டை கொலைக்கு வேறு ஏதாவது காரணமா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executive wife murder Police investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->