போட்டாபோட்டி! அனைத்து பெண்களுக்கும் மாதம் தோறும் ரூ.2100! அதிரடியாக அறிவித்த பாஜக!
BJP Manifesto 2100 money For Haryana womans
ஹரியானா மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் அக்டோபர் மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி கவர்ச்சிகரமான தனது தேர்தல் வாக்குறுதிகளைக் வெளியிட்டுள்ளது.
பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.2000, பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம். சாதிவாரி கணக்கெடுப்பு, கிரீமி லேயரின் வருமான வரம்பை ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்துவது, அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட முக்கியமான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹரியானா தேர்தலையொட்டி பாஜகவும் மிக முக்கியமான ஒரு தேர்தல் வாக்குறுதியை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநிலத்தின் அணைத்து பெண்களுக்கும் "லாடோ லக்ஷ்மி யோஜனா" திட்டத்தின் கீழ், மாதந்தோறும், 2100 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
ஏற்கனவே, காங்கிரஸ் 2000 ரூபாய் என அறிவித்த நிலையில், கூடுதலாக 100 ரூபாய் அதிகரித்து பாஜக இந்த தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளது.
English Summary
BJP Manifesto 2100 money For Haryana womans