இண்டி கூட்டணி ஒற்றுமையாக தான் இருக்கிறது; லோக்சபா தேர்தல் மீண்டும் ஒன்றிணைவோம்; ராஜிவ் சுக்லா..! - Seithipunal
Seithipunal


இண்டி கூட்டணி ஒற்றுமையாக தான் இருக்கிறது. லோக்சபா தேர்தலில் மீண்டும் இந்த கூட்டணி ஒன்றிணையும் என்று காங்கிரஸ் எம்.பி., ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். 

புதுடில்லி சட்டசபை தேர்தலில் 27 வருடங்களுக்கு பிறகு பாஜக வரலாற்று வெற்றியை பிடித்துள்ளது. தேர்தல் முடிவுகளை பா.ஜ., தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். 

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி தோல்விக்கு பல காரணங்களை கூறப்படுகிறது.  இண்டி கூட்டணியாக போட்டியிடாமல், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்தனியே களம் கண்டதே ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந் நிலையில், இண்டி கூட்டணி ஒற்றுமையாக தான் இருக்கிறது. லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி மீண்டும் ஒன்றிணையும் என்று காங்கிரஸ் எம்.பி., ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;

இண்டி கூட்டணி என்பது லோக்சபா தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் சட்டசபை தேர்தலின் போது சுயமாக முடிவு எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது.

லோக்சபா தேர்தல் வரும்போது, இண்டி கூட்டணி குறித்த பேச்சு மீண்டும் தொடங்கும். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajiv Shukla said that we will unite again as an Indi alliance for the Lok Sabha elections


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->