மகா கும்பமேளா 2025; இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார் ஜனாதிபதி முர்மு..!
President Murmu is taking a holy dip in the Triveni Sangam today
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அங்கு திரிவேணி சங்கமத்தில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய இந்த கலாசார, ஆன்மிக நிகழ்வில்பலநாடுகளை சேர்ந்தவர்களும் நமது நாட்டினரும் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (திங்கட்கிழமை) திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/tri-bt5tz.jpg)
இதற்காக பிரயாக்ராஜ் செல்லும் ஜனாதிபதி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீட்டுவதோடு, பல்வேறு சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொள்வார் என ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்கள் புனித நீராட்டியுள்ளனர். அத்துடன் 70-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து தூதர்களும் இங்கு புனித நீராட்டியுள்ளனர். கடந்த வாரம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.
English Summary
President Murmu is taking a holy dip in the Triveni Sangam today