செருப்பை கழட்ட சொன்னதால் மருத்துவமனையை இடிக்க வந்த புல்டோசர்.!! பாஜக மேயரின் அட்டகாசம்.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் லக்னோ மாநகராட்சி மேயர் பதவிக்கு பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சுஷ்மா கார்க்வால் வெற்றி பெற்றதை அடுத்து லக்னோவின் புதிய மேயராக பதவி ஏற்றுக்கொண்டார்

இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் மேயர் சுஷ்மா காரக்வால் லக்னோவில் இருக்கும் விநாயக் மெடிகேர் என்ற உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் சுரேன் குமார் என்ற நபரை நலம் விசாரிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக மருத்துவமனை ஊழியர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் நுழைவதற்கு முன்பு காலணிகளை அகற்றுமாறு பாஜக மேயரிடம் கேட்டுக்கொண்டார். அதனால் பாஜக மேயர் உடன் வந்தவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக மேயரின் ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக புல்டோசர் வாகனத்தை எடுத்து வந்து மருத்துவமனையை இடிக்க முயன்றுள்ளனர். இதனால் பதறிப்போன மருத்துவமனை ஊழியர்களும் காவல்துறையினரும் பாஜகவினரை சமாதானம் செய்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். பாஜக மேயரை செருப்பு கழட்ட சொன்னதால் புல்டோசர் கொண்டு மருத்துவமனையில் இடிக்க வந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP mayor sushma kharakwal hospital visit bulldozer action ruckus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->