பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக அமைச்சர் ராஜினாமா..!! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. அவருடைய அமைச்சரவையில் விளையாட்டு துறை அமைச்சராக சந்திப் சிங் இருந்து வருகிறார். முன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி வீரரான இவர் மீது பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜூனியர் தடகள பயிற்சியாளர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.

விளையாட்டுத்தறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பயிற்சியாளர் கூறியதாவது "அவருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் அதற்காக எனக்கு பதவி உயர்வு உள்ளிட்ட பல வசதிகளை செய்து தருவதாகவும் அமைச்சர் சந்திப்பின் கூறினார். அதற்கு நான் மறுத்ததால் பாலியல் ரீதியில் துன்புறுத்தினார்" என குற்றச்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் ஹரியானா மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. 

இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தடகள பயிற்சியாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விளையாட்டு துறை அமைச்சர் சந்திப் சிங் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சந்திப் சிங் தனது விளையாட்டு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP minister resigns after being caught in sex scandal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->