பாஜகவுக்கு கொடுத்த ஆதரவு வாபஸ்! மோடி பதவி ஏற்ற நாளிலேயே முறிந்தது கூட்டணி! - Seithipunal
Seithipunal


மக்களவையில் இன்று பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பதவியேற்று கொண்ட நிலையில், இனி பாரதிய ஜனதா கட்சிக்கு எங்களின் ஆதரவு இல்லை என்றும், இனி நாங்கள் எதிர்க்கட்சி மட்டுமே என்றும், ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்ததன் காரணமாக, கடந்த 24 ஆண்டு காலமாக ஒடிசாவின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த நவீன் பட்நாயக் தனது பதிவியை ராஜினாமா செய்தார். 

மேலும் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வென்றது. ஆளுங்க கட்சியான பிஜு ஜனதா தளம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. 

ஆனால், பாராளுமன்றத்தின் மாநிலங்கவையில் 9 எம்பிக்களை வைத்துள்ள பிஜு ஜனதா தளம், இனி மாநிலங்களவையில் பாஜகவுக்கு எந்த ஆதரவும் கிடையாது என்று அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜகவிற்கு வெளியில் இருந்து பிஜு ஜனதா தளம் ஆதரவு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஸ்மித் பத்ரா தெரிவிக்கையில், பிஜேடி எம்பிக்கள் இனி மாநிலங்களவையில் மக்கள் பிரச்சனைகளை பேசுவதோடு நிறுத்தாமல், ஓடிஸா மாநில மக்களின் நலனை கருதி, மக்கள் நலனுக்கு எதிராக மத்திய பாஜக அரசு ஏதேனும் செய்தால் போராட்டம் நடத்துவோம். 

மேலும், ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலுவான கோரிக்கை வைப்போம். இனிமேல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடம் இல்லை. நாங்கள் மாநிலங்களவையில் இனி எதிர்க்கட்சி மட்டுமே. அப்படி தான் செயல்படுவோம். ஒடிசா மக்களின் நலனுக்காக நாங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி விட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP NDA Alliance break Odisha BJD


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->