வன்முறையாக மாறிய பாஜக போராட்டம்..போலீசாரை கட்சி கொடியுடன் ஓடிஏ ஓடிஏ விரட்டிய தொண்டர்..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளத்தில் பாஜக சார்பில், மம்தா பானர்ஜி அரசில் ஊழல் மலிந்து விட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி, போராட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலத்தின் பல இடங்களில் இருந்து பாஜகவினர் ஒன்று திரண்டனர். 

பாஜகவினர் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் அந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில், ரெயில் நிலையங்களில் வைத்தே பாஜகவினர் தடுக்கப்பட்டதாக போலீசார் மீது குற்றம் சாட்டினர். இந்த போராட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். 

 பாஜக தொண்டர்கள், தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கியதும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஹவ்ரா பகுதியில் பாஜகவினர் பேரணியாக வந்தபோது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை மீறி பாஜகவினர் முன்னேறினர். கூட்டத்தினரை கலைப்பதற்காக, பேரணியாக வந்தவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அங்கு ஏற்பட்ட வன்முறையினால் காவல் துறை வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. 

இதில், போலீஸ்காரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். பாஜக கொடியுடன் காவலர் ஒருவரை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி தாக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பல தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp strike in culcutta


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->